38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் இன்று துவக்கி வைக்க உள்ளார்.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 38 மாவட்டங்களிலும் வனத்துறை சார்பில் தலா 1,000 மரக்கன்றுகள் விதம், 38,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மேலும் 36 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், நிவாரண உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.