, ,

இன்று கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

By

இரு வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரு வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை செல்கிறார். இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை செல்ல உள்ளார்.

கோவையில் சின்னியம்பாளையில் உள்ள தனியார் அரங்குக்கு முதல்வர் காரில் செல்கிறார். அங்கு மாற்று கட்சியினை சேர்ந்த 6000 பேர் திமுகவில் இணைந்து விழாவில் கலந்து கொள்கிறார்.

அதனை தொடர்ந்து,  மாலை 5 மணிக்கு கருமத்தம்பட்டியில் விசைத்தறி கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.  பின் இரவு 8 மணி அளவில் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

Dinasuvadu Media @2023