கொரோனா தடுப்பு குறித்து டிச.16,17ஆம் தேதிகளில் இந்தந்த மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு.!

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கரூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது. அதேசமயம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கும் அமலில் இருக்கும் என்றும் அறிவித்திருந்தது.

இதனிடையே, கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வந்தார். தொடர் புயல் மற்றும் மழையால் ஆய்வு மேற்கொள்ளும் பணி ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து டிச.16,17ஆம் தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார். 3 மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் மற்றும் சுகாதார குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்