காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து..!

காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

காவல் திறனாய்வு போட்டி :

அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். கடந்த 13 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 66-வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினர் வெற்றி பெற்று பக்கங்கள் மற்றும் கேடையங்களை பெற்றனர்.

Police Aptitude Competition 1

நடைபெற்ற போட்டிகள் :

இதில் அறிவியல் சார்ந்த புலன் விசாரணை திறன் போட்டி, கணினி திறன் போட்டி, வெடிகுண்டு தடுப்பு திறன் போட்டி, மோப்ப நாய் திறன் போட்டி, வீடியோ எடுக்கும் திறன் போட்டி மற்றும் தொழில் ரீதியாக புகைப்படம் எடுக்கும் திறன் போன்ற போட்டிகளில் தமிழ்நாடு காவல் துறையினர் சார்பில் 70 பேர் கலந்துகொண்டனர்.

Police Aptitude Competition 2

முதலமைச்சரிடம் வாழ்த்து :

இதனையடுத்து, அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் முதலமைச்சரை சந்தித்து அவர்கள் வென்ற பதக்கங்கள் மற்றும் கேடையங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment