போலீசாரின் வாரிசுகள் 1,132 பேருக்கு பணி- முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்தில் புதிதாக 10 காவல்நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

  • தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும். குறிப்பாக காவலர்கள் பேருந்தில் பயணம் செய்ய பயண அட்டை வழங்கப்படும்.
  • காவலர் முதல் ஆணையர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம்.
  • மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும்.
  • சைபர் குற்றத்தை தடுக்க மாநில இணையதள குற்றப்புலனாய்வு மையம் சென்னையில் அமைக்கப்படும்.
  • தமிழகத்தில் புதிதாக 10 காவல்நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
  • சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.275 கோடி மதிப்பில் 896 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.
  • ஆவடி, தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும்..
  • பொதுமக்கள் தங்கள் குறைகளை காணொலியில் காவல்நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்க செயலி உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
  • காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடும் முறையை எளிமையாக்கி சம்பந்தப்பட்ட காவல் ஆணையர்/காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம் விடும் அதிகாரம் வழங்கப்படும்.
  • சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளையும் வல்லுநர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வங்கி மோசடி, வேலை மோசடி, ஆவண மோசடி மற்றும் இணைய குற்றங்கள் ஆகியவற்றை புலன்விசாரணை செய்ய ரூ.1 கோடி செலவில் நிபுணர்களின் சேவை பயன்படுத்தப்படும்.
  • பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “அனைத்து இடங்களிலும் ஓர் அனைத்து மகளிர் காவல் நிலையம்” என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
  • தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பெற்றதும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
author avatar
murugan