ஐபிஎல் 2019: பெங்களூரு அணியை வச்சு செஞ்ச சென்னை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபில் தொடரின் 12வது சீசனில் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

முதலில் டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங் செய்ய முடிவு செய்தது.

இதில் துவக்கம் முதலே பெங்களூரு அணியில் விக்கெட்டுகள் சரிய துவங்கின. ஹர்பஜன் சூழலில் சிக்கி கோஹ்லி, ஹர்பஜன் மற்றும் டி வில்லியர்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் ஆட்டமிழக்க, 8 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகள் இழந்தது.

அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி. அதிகபட்சமாக பார்திவ் 29ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் ஹர்பஜன் மற்றும் தாஹிர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து, பேட்டிங் செய்ய வந்த சென்னையின் வாட்சன் மற்றும் ராயுடு இருவரும் சற்று திணறினர். வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் ரெய்னா ராயுடு சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பிறகு 19 ரன்களுக்கு ரெய்னா ஆட்டமிழந்தார்.

ராயுடு 28 ரன்களுக்கு சிராஜ் பந்தில் வெளியேறினார். பின்னர் ஜடேஜா மற்றும் ஜாதவ் இறுதிவரை நின்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 17.4 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 

author avatar
Vignesh

Leave a Comment