சென்னையின் சூழலில் சிக்கி சின்னாபின்னமான பெங்களூரு அணி, 70 ரன்களில் சுருண்டது

ஐபில் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின.

டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. துவக்க வீரர்களாக களமிறங்கிய பெங்களூரு அணியின் பார்த்தீவ் பட்டேல் மற்றும் விராட் கோலி இருவரும் துவக்கம் முதலே திணற துவங்கினர். கேப்டன் விராட் கோலி ஹர்பஜனின் பந்தில் கேட்ச் கொடுத்து முதலில் வெளியேற அதன்பின் அவரை தொடர்ந்து மொயீன் அலி, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஹர்பஜன் பந்தில் வெளியேறினார்.
8 ஓவர்கள் முடிவில் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பெங்களூரு அணி. 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். இவர் வீழ்த்திய 3 விக்கெட்டுகளும் மிக முக்கியமானவை. தீபக் சஹர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும் மிக அற்புதமாக ரன்களை கட்டுப்படுத்தினார்.
அதன்பின் வந்த இம்ரான் தாஹிர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி 4 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக செயல்பட்டார்.
பின்னர் ஜடேஜா இவரும் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 17 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பெங்களூரு அணி.
அடுத்ததாக பிராவோ பந்து வீசிய முதல் பந்தில் கேதர் ஜாதவ் வசனம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் வெளியேறினார் பார்த்தீவ் பட்டேல். இறுதியாக 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது பெங்களூரு அணி.
அதிகபட்சமாக பார்திவ் படேல் 29 ரன்கள் எடுத்தார். அணியில் இவர் ஒருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்திருந்தார்.
சென்னை அணிக்கு 71 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டுள்ளது.
author avatar
Vignesh

Leave a Comment