விபத்தில் சிக்கி ஆசிய போட்டியில் தங்கம் வென்ற சென்னை வீரர் பலி !

சென்னை ஷெனாய் நகர் லட்சுமி காலனியை சேர்ந்த டாக்டர் பத்ரிநாத் மகன் பால கிருஷ்ணன்.இவர்

By murugan | Published: May 15, 2019 10:54 AM

சென்னை ஷெனாய் நகர் லட்சுமி காலனியை சேர்ந்த டாக்டர் பத்ரிநாத் மகன் பால கிருஷ்ணன்.இவர் தேசிய மற்றும் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாலகிருஷ்ணன் நீச்சல் பிரிவில் கலந்து கொண்டு தங்கம் வென்றார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் பாலகிருஷ்ணன் வேலை  செய்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சென்னை வந்த பாலகிருஷ்ணன். தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு  இருசக்கர வாகனத்தில் அரும்பாக்கம் வழியாக வந்து கொண்டிருந்த போது அப்போது ஜல்லிக்கலவை ஏற்றிக் கொண்டு சென்று இருந்த லாரியை முந்த முயற்சி போது திடீரென நிலைதடுமாறி லாரியின் சக்கரத்தின் அடியில் விழுந்தார். சக்கரத்தில் சிக்கிய பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த  சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார்வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc