உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழக ஆட்சியை சவப்பெட்டியில் வைத்து விட்டது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “சவப்பெட்டியில் நாலு முலையிலும் அடிக்கிற ஆணி தான், இந்த நாலு தொகுதியிலும் நடக்கிற இடைத்தேர்தல்.” என தெரிவித்துள்ளார். மேலும், நீங்கள் போடுகிற ஒவ்வொரு ஓட்டும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு அடிக்கிற ஆணி என தெரிவித்துள்ளார்.