சென்னை ஐஐடி தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று..! தொற்று எண்ணிக்கை 145-ஆக உயர்வு..!

சென்னை ஐஐடி-ல் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை ஐஐடி-யில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது. 4,974 மாதிரிகள்  பரிசோதனை செய்யப்பட்டதில், இதுவரை 2,729 பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.