நியூசிலாந்தை போல சென்னையையும் மாற்ற முடியும் – அமைச்சர் உதயகுமார்

நியூசிலாந்தை போல சென்னையையும் மாற்ற முடியும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 286 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ள நிலையில், சென்னையில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 224 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் உதயகுமார் அவர்கள் பேசுகையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியது போல, சென்னையையும் மாற்ற முடியும் என்றும்,  தெருவாரியாக 100% விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நியூசிலாந்து கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.