ஆகஸ்ட் 3 வரை 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

ஆகஸ்டு 1,2,3 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆகஸ்டு 1,2,3 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தமிழ்நாட்டில் இதர பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் மழை பெய்யும். வங்கக்கடலில் தென்மேற்கு, தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் இன்று பலத்த காற்று வீசக்கூடும்.

இன்றும், நாளையும், வங்கக்கடலில் வடமேற்கு, மத்திய பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan