தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..!!

  • நீலகிரி, கோவை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தெற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், சேலம், ஈரோடு, திருச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையை நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.