ரெம்டெசிவிர் மாநிலங்களுக்கு வழங்குவதை நிறுத்திவைக்க – மத்திய அரசு முடிவு..!

ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் பல்வேறு பகுதிகளில் ரெம்டெசிவிர் மருந்து தேவை அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில், ரெம்டெசிவிரின் உற்பத்தி ஒரு மாதத்திற்குள் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வீட் செய்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில், 10 மில்லியன் ரெமிடெசிவிர் ஊசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், மே மாதத்தில் அதன் எண்ணிக்கை 1 கோடியை எட்டியுள்ளது என்று அவர் கூறினார். அவர் ட்வீட் செய்துள்ளார். ஏப்ரல் மாதம் ரெம்டெசிவிர் மருந்தின் தினசரி உற்பத்தி 33,000 குப்பிகளாக இருந்தது. தற்போது 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20 லிருந்து 60 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், ரெம்டெசிவிர் மருந்தை மாநிலங்களுக்கு வழங்குவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் தேவைக்கு அதிகமான ரெம்டெசிவிர் வினியோகம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

author avatar
murugan