மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – ராமர் கோவில் குறித்து விவாதம்!

நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1ம் தேதி மத்திய அரசின் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதன்பின் நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான காரசார விவாதம் நடைபெற்று வந்த நிலையில், பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று வரை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த சில நாட்களை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு பறந்த ஆளில்லா விமானங்கள்.!

தொடர்ந்து, பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விவாதமும் விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இன்று அயோத்தி ராமர் கோவில் பற்றிய விவாதத்தை மத்திய அரசு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், நாடாளுமன்றத்தில் முக்கிய அலுவல் இருப்பதால் கட்டாயம் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று அவைக்கு வர தலைமை கொறடா உத்தரவிட்டிருந்தார். மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடைசி நாளான இன்று வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பி திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார்.அயோத்தி ராமர் கோவில் பற்றி இன்று விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment