புதிய பிசினஸ் தொடங்கிய பிரபல நடிகை! என்ன பிசினஸ் தெரியுமா?

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் ஒரு புதிய பிசினஸை துவங்கி உள்ளார். பொதுவாக நடிப்பு துறையில் சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக தொழில் துறையில் முதலீடு செய்வதில், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் மும்பையில் நகை கடை ஒன்றை திறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வருட இறுதிக்குள் அவருக்கு எப்படியாவது திருமணம் நடத்திவிட வேண்டும் என பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.