சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மண்டலம் வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ!

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மண்டலம் வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை இணையத்தில் வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு CBSE 12ம் வகுப்பு தேர்வில் 92.71% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 7% குறைந்துள்ளது.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் மண்டலம் வாரியாக தேர்ச்சி விகிதம் என்ன என்பதை பார்க்கலாம். சிபிஎஸ்இ தேர்வில் 98.82% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. இதுபோன்று 98.16% தேர்ச்சியுடன் பெங்களூரு இரண்டாம் இடத்திலும், 97.79% தேர்ச்சியுடன் சென்னை மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதனைத்தொடர்ந்து, டெல்லி கிழக்கு 96.29%, டெல்லி மேற்கு 96.29% தேர்ச்சி விகிதம் பெற்று நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment