கிசான் திட்டத்தில் முறைகேடு – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி.!

பிரதமரின் கிசான் திட்ட மோசடி தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதால் தற்காலிகமாக இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்திருந்தார். இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டடு, விசாரணை நடைபெற்றது வருகிறது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வருகிறது.

இந்நிலையில், பிரதமரின் கிசான் திட்ட மோசடி தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் 8 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறனர். விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 5 பேர் உட்பட 8 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலூரில் விவசாயிகள் அல்லாத 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்