வாக்குக்கு பணம் – அதிமுக பெண் பிரமுகருக்கு அபராதம் விதிப்பு!

மாநகராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது சிக்கிய அதிமுக பெண் பிரமுகருக்கு அபராதம் விதிப்பு.

2022-ம் ஆண்டு பிப்ரவரி 19-ல் திருவான்மியூர் சிங்காரவேலன் நகர் 179-ம் வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர் கயல்விழி வெற்றி பெற்றார். திமுக வேட்பாளரை கயல்விழியை எதிர்த்து அதிமுக வேட்பாளராக ஜி.ஜமுனா போட்டியிட்டார்.  சிங்காரவேலன் நகர் 179-வது வார்டில் தொடக்க பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா என புகார் அளிக்கப்பட்டது.

தாவல் அறிந்து கே.ஹரிஹரன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சென்று பணப்பட்டுவாடா செய்த கலாவை சுற்றிவளைத்தனர். அதிமுகவை சேர்ந்த கலாவிடம் இருந்து வாக்காளர் பட்டியல், ரூ.5,000 ரொக்கமும் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரிகளின் புகாரின்பேரில் திருவான்மியூர் போலீசார் 171 இ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்த சமயத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் வாக்குக்கு பணம் கொடுத்த கலாவுக்கு ரூ.5,000 மட்டும் அபராதம் விதித்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment