ஈபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரும் வழக்கு – செப்.27 க்கு ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரும் வழக்கு செப்.27 க்கு ஒத்திவைப்பு.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதலாக சிலரை விசாரிக்கக்கோரும் மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.

கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர். இவர்களது மனுவில், கோடநாடு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்பி முரளி ரம்பா உள்ளிட்ட 8 பேரை விசாரிக்கக்கோரி கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கூடுதலாக சிலரை விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை மனுதாரர்கள் விளக்கமாக கூறவில்லை என்றும் ஏன் அவர்களை விசாரிக்க வேண்டும் என விரிவான காரணங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்