கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.?! – சித்தார்த் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு.!

 நடிகர் சித்தார்த் சுக்லாவின் இறப்புக்கு ஒருவர் ‘பாய்ஸ்’ சித்தார்த் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்ததால் நடிகர் சித்தார்த் வருத்தம்

தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனை தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் சித்தார்த் சமூக வலைதளபக்கங்களில் சமூக அக்கறையுடன் கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லாவின் இறப்புக்கு ஒருவர் ‘பாய்ஸ்’ சித்தார்த் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்தது போல் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.  இதனை பார்த்த சித்தார்த், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில் “இப்படி குறிவைத்து வெறுப்பை காட்டுகின்றனர். அந்த அளவிற்க்கு தரம் தாழ்ந்துவிட்டோமோ நாம்” என வருத்தமாக பதிவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.