புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது வழக்குப்பதிவு..!

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுச்சேரியில் உள்ள பெரிய மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி தலைவர் இரா. சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், விவசாயிகள் ஆகியோர் பெரிய மார்க்கெட்டை இடிக்கும் பணியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பிய பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பெரிய மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகை போராட்டத்தில், ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் சிவா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் பிரிவின் கீழ் நாராயணசாமி உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.