கேப்டன் விஜயகாந்திற்கு கால் விரல்கள் அகற்றம் – அண்ணாமலை ட்வீட்…!

அண்ணன் சுதீஷ் அவர்களிடம் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலையை தொலைபேசி மூலமாக விசாரித்தேன் என அண்ணாமலை ட்வீட்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது என அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,  அண்ணன் சுதீஷ் அவர்களிடம் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலையை தொலைபேசி மூலமாக விசாரித்தேன். கேப்டன் அவர்கள் ஆண்டவனின் ஆசிர்வாதத்தோடு, மக்களுடைய அன்போடு பூரணமாக நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment