, ,

எங்கள் வெற்றியை வரும் தலைமுறை பேசும்.! கேப்டன் ஹர்திக் பாண்டியா உற்சாகம்.!

By

நேற்று ஐபிஎல் 15-வது சீசனுக்காண இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடிமைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியது.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது.  131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அதிரடியாக விளையாடி 18.1 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக வென்றது.

இந்த நிலையில், தங்கள் அணியின் வெற்றி குறித்து இறுதிப் போட்டி முடிந்த பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.  இது தொடர்பாக அவர் பேசியது ” நீங்கள் ஒரு குழுவாக இணைந்து, உண்மையாக இருக்கும் நபர்களை கொண்டு ஒரு அணியை உருவாக்கினால் இது மாதிரியான அதிசயங்களை நிகழ்த்தலாம். அதற்கு இந்த வெற்றி ஓர் உதாரணம்.

நாங்கள் சரியான பந்துவீச்சாளர்களுடன் விளையாட விரும்பினோம். நான் பார்த்தவரையில் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக பார்க்கப்பட்டு வருகிறது. பவுலர்களும் நமக்கு ஆட்டத்தில் வெற்றி பெற்றுக் கொடுப்பார்கள்.நாங்கள் நிறைய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். நங்கள் சில போட்டிகளில் தோல்வியையும் அடைந்திருக்கிறோம் அதில் நங்கள் செய்த தவறான விஷியத்தை அடுத்த போட்டியில் திருத்திக்கொள்ள பேசிப்போம்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஐபிஎல் வெற்றி குறித்து அடுத்து வரப்போகும் தலைமுறையினர் பேசுவார்கள். நாங்கள் இந்த சீசனில் தான் அறிமுகமானோம், இந்த அறிமுக சீசனிலேயே சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.