பொட்டுக்கடலையில் முறுக்கு கூட செய்யலாமா….?

பொட்டு கடலை என்பது ஒரு கடலை வகையை சேர்ந்தது. இது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் பல வகையான சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த கடலையை நாம் இடையில் உண்ணும் உணவுகளை போன்று தான் பயன்படுத்துகிறோம். மேலும் துவையல் மற்றும் மிட்டாய்கள் இதன் மூலம் செய்யப்படுகிறது. இப்பொது பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Image result for பொட்டுக்கடலையில் முறுக்கு
தேவையான பொருட்கள் :

  • பொட்டுக்கடலை – அரை கப்
  • அரிசி மாவு – 2 கப்
  • ஓமம் – 1 டேபிள் ஸ்பூன்
  • எள் – 1 டேபிள் ஸ்பூன்
  •  பெருங்காயம் – 5 சிட்டிகை
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில் பொட்டுக்கடலையை மாவாக அரைத்து கொள்ள வேண்டும். பின் ஒரு தட்டில் அரிசி மாவு, போட்டு கடலை மாவு, ஓமம், எள், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப்போட்டு நன்றாக கலந்து, சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் வானொலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு குழலில் போட்டு எண்ணெயில் பிழியவும். பிறகு முறுக்கு பொன்னிறமாக வந்ததும் எடுத்து விட வேண்டும்.
 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment