7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்குமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத நிலுவையில் உள்ள அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் அரசாங்கத்தால் முடிவு எடுக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 2022 இல் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது பற்றி ஜேசிஎம் தேசிய கவுன்சில் செயலாளர் (பணியாளர் தரப்பு) சிவ கோபால் மிஸ்ரா,இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் டிஏ முடக்கம் காலத்தை ஈடுசெய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று கவுன்சில் கருதுகிறது என்றும் நிலுவைத் தொகை பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண திட்டமிட வேண்டும் என்று கூறினார்.

அமைச்சரவை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, இது இன்னும் முடிவடையவில்லை மற்றும் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரு முறை தீர்விற்கான கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதி அமைச்சகம், செலவினத் துறை மற்றும் ஜேசிஎம் அதிகாரிகளுக்கு இடையே ஒரு கூட்டுக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 மாத டிஏ நிலுவைத் தொகை மற்றும் அதை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கூறினார்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அக்டோபர் 2021 முதல் 17% இல் இருந்து 31% ஆக மீட்டெடுக்கப்பட்டுள்ளது, இருப்பினும் நிலுவைத் தொகை இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிலுவைத் தொகையை விடுவிக்க முடிவு செய்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அதிகரிப்புடன் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18  மாதங்களுக்கான  மொத்த தொகையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லெவல்-1 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்றும், லெவல்-13க்கான டிஏ நிலுவைத் தொகை ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரையிலும், லெவல்-14க்கு நிலுவைத் தொகை ரூ. 1,44,200 முதல் 2,18,200 வரை இருக்கும் என்று ஷிவ் கோபால் மிஸ்ரா கூறியிருந்தார்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment