நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள் மோடி – ராகுல் காந்தி

இந்தியா என்ற கருத்தை மணிப்பூரில் இருந்து மீண்டும் உருவாக்குவோம்  என்று ராகுல் காந்தி ட்வீட். 

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 2 பெண்களை வீதியில் நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி, நாட்டையே கொந்தளிப்புக்குளாகி உள்ளது.

இந்த நிலையில், இந்த சமத்துவத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியா என்ற கருத்தை மணிப்பூரில் இருந்து மீண்டும் உருவாக்குவோம்; எங்களை எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள், நாங்கள் I.N.D.I.A கூட்டணி தான். மணிப்பூரில் உள்ள ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரை துடைக்கவும், மாநிலத்தை மீட்டெடுக்கவும் நாங்கள் உதவுவோம்; மக்கள் அனைவரிடையே அன்பையும் அமைதியையும் மீண்டும் திரும்பக் கொண்டு வருவோம்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.