#BREAKING: 10,11,12-ம் வகுப்பு தேர்வு அடிப்படையில் CBSE 12ம் வகுப்பு மதிபெண்கள் கணக்கீடு..!

+2 சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 10, 11-ம் வகுப்புகளில் இருந்து தலா 30%, 12ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண் வழங்கப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டது. இதனால் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் வரவேற்றது. மேலும் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது என்பதை இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ-க்கு கடந்த 3-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, மதிப்பெண் வழங்கும் நடைமுறையை குறித்து பரிந்துரை செய்த 13 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நியமித்தது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் அந்த குழுவானது அறிக்கை அளித்துள்ளனர்.

அதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5 பாடங்களில் நடைபெற்ற தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற மூன்று மதிப்பெண்களில் 30 சதவீத மதிப்பெண்களும், 11 வது வகுப்பில் வகுப்பில் பாடங்களில் 30 சதவீத மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் யூனிட், பருவத் தேர்வு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்களில் 40 சதவீதம் மதிப்பெண்களும் என வெயிட்டேஜ் முறையில்  சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கக்கப்படும் என சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வுக்கு 100 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
murugan