ஆரஞ்சு பழத்தை விட அதிக நன்மை கொண்ட முட்டை கோஸ்!

முட்டை கோஸ் நாம் வழக்கமாக பயன்படுத்த கூடிய ஒரு உணவு வகை காய்கறியாக இருந்தாலும், அதின் நன்மைகள் நமக்கு தெரிவதில்லை. ஏகப்பட்ட நன்மைகளை முட்டை கோஸ் தனக்குள் அடக்கி வைத்துள்ளது. அவற்றை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

முட்டை கோஸின் நன்மைகள்

விட்டமின் சி சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது என்பதால் தான் ஆரஞ்சு பழத்தினை நோயாளிகளுக்கு அதிகம் சாப்பிட கொடுக்க சொல்லி மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால், ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட அதிகளவு விட்டமின் சி சத்து முட்டை கோஸில் தான் உள்ளதாம். இதன் காரணமாகவும், அதிகளவு சல்பர் தன்மை காரணமாகவும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், நோய் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கவும் முட்டை கோஸ் உதவுகிறது.

மேலும், சமைக்கப்பட்ட முட்டை கோசில் 33 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே உடல் எடை அதிகரித்து விடுமோ என அச்சம் கொள்ள தேவையில்லை. இந்த முட்டை கோசில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியமாக நமது உடலை பாதுகாக்க உதவுகிறது. ரத்த கொதிப்பை கட்டுப்படுத்த இது மிகவும் உதவுகிறது. காரணம் இதிலுள்ள பொட்டாசியம் தான். கண்ணுக்கு இது மிகவும் நல்லது. கண்புரை ஏற்படாமலும் தவிர்க்க உதவுகிறது.

இதிலுள்ள சல்பர் மற்றும் அயோடின் காரணமாக குடல்களை சுத்தப்படுத்தவும் இது உதவுகிறது. முட்டை கோஸ் அதிகம் 9சாப்பிடுபவர்களில் 90 சதவீதத்தினருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளதும் ஆய்வு ஒன்றில் தெரிய  வந்துள்ளது. வயிற்று புண் உள்ளவர்கள் இதனை சாறு எடுத்து குடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்.

author avatar
Rebekal