#IndvsEng Live: பும்ரா வின் புயலில் விழும் அடுத்தடுத்து விக்கெட்கள் தடுமாறும் இங்கிலாந்து அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கென்னிங்டன் ஓவல், லண்டன் வைத்து நடைபெறுகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது இப்போட்டியில் விராட் கோலி மற்றும் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக விளையாடவில்லை.

முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த முதலே தடுமாறி வருகிறது.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும்  ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.ஜேசன் ராய் ரன் ஏதும் எடுக்காமலும் ஜானி பேர்ஸ்டோவ் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட்(0) பும்ராவின் புயலில் டக் அவுட் ஆகினார்.அடுத்ததாக முகமது ஷமியிடம் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.லியாம் லிவிங்ஸ்டோன் 8 பந்துகளை சந்தித்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கிளீன் போல்ட் ஆகினார்.தற்போதுவரை இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்): ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிரேக் ஓவர்டன், டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லி.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment