#Breaking:கருமுட்டை விற்பனை – குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில்,சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

மேலும்,ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,சிறுமியின் வாக்குமூலத்தையடுத்து ஆந்திரா,கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பின்னர், கருமுட்டை விற்பனை வழக்கில் விசாரணை விரைந்து நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை முடிந்து அறிக்கை அளித்த பின்,வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,16 வயது சிறுமியின் கருமுட்டை விவகாரம் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.அதன்படி,குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ராமசாமி உட்பட 6 பேர் கொண்ட குழுவானது,ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள்,சம்மந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் காவல்துறையிடம் விசாரணையை தொடங்கியுள்ளது.

 

Leave a Comment