#Breaking:நிலை கொண்டுள்ள புயல்;தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய ‘அசானி புயல்’ மேலும்,தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில்  நகர்ந்து வரும் நிலையில்,நாளை ஆந்திரா,ஒடிசா கடற்கரையை நோக்கி மத்திய கடல் பகுதியில் நிலவும் எனவும் வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக்கடலில் அசானி புயல் நிலை கொண்டுள்ளது எனவும்,தமிழகத்தில் கோவை,நீலகிரி, திருப்பூர்,தேனி,திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதே சமயம்,சென்னையை பொறுத்த வரை மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,நாளை முதல் மே 13 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழகம்,புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே,வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதை குறிக்கும் விதமாக புதுச்சேரி,காரைக்கால்,பாம்பன்,தூத்துக்குடி,எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.