#BREAKING: ஜப்பானில் பலத்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.1…

கிழக்கு தைவான் மற்றும் தென்மேற்கு ஜப்பான் இடையே பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை இல்லை.

ஜப்பான் நாட்டில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் யோனாகுனி என்ற நகரத்தில் இருந்து தென் மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, கிழக்கு தைவானுக்கும் தென்மேற்கு ஜப்பானுக்கும் இடையில் இன்று  ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஆனால் சுனாமி எச்சரிக்கை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தைபேயில் லேசான நடுக்கம் உணரப்பட்டது, ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. தைவானில் இருந்து கிழக்கே 110 கிலோமீட்டர் (66 மைல்) தொலைவில் உள்ள யோனகுனியின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 27 கிலோமீட்டர் (17 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தைவானின் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் கடல் மேற்பரப்பில் இருந்து 20 கிலோமீட்டர்கள் (12 மைல்) அடியில் ஏற்பட்டுள்ளது என்றும் அலைகள் சீற்றம் இருக்கலாம், ஆனால் சுனாமி ஆபத்து இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்