#Breaking : கர்நாடக சட்டபேரவை தேர்தல் எப்போது.? தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு.!

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவை 224 தொகுதிகளை கொண்டுள்ளது.அம்மாநில அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.இந்நிலையில் இந்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

224 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே 3 முனை போட்டி நிலவி வருகிறது. கர்நாடகா தேர்தலுக்கு 124 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

வயநாடு:

ஒரு இடம் காலியான பிறகு இடைத்தேர்தலை நடத்த ஆறு மாத கால அவகாசம் உள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதித்துறை தீர்வுக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. எனவே, காத்திருப்போம் என்று ராகுல் காந்தியின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதி குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment