#BREAKING : விமான பெண் அதிகாரிக்கு வன்கொடுமை…! விமானப்படை தலைமை தளபதிக்கு தேசிய மகளீர் ஆணையம் நோட்டீஸ்…!

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் இந்த சோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கோவை விமானப்படை பயிற்சி மையத்தில், விமான  அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாததாக ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விமானப்படை மருத்தவ அதிகாரிகள்  உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை முறையை பயன்படுத்தியதாக தேசிய மகளீர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய மகளீர் ஆணையத்தின் தலைவர் ரேகா அவர்கள், கண்டனம் தெரிவித்து, விமானப்படை தலைமை தளபதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாலியல் ரிதியாக பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கு இருவிரல் சோதனை என்பது, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இந்த சோதனை சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. இந்த சோதனைக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் இந்த சோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானப்படை தலைமை தளபதிக்கு, தேசிய மகளீர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.