#Breaking:பட்டாசு தயாரிப்பில் விதிமீறல் – உச்சநீதிமன்றம்..!

பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளைமீறி பட்டாசு தயாரித்து இறுப்பதாக சிபிஐ முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் ,தடை செய்யப்பட்ட பட்டாசுகளை ஏன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கேள்வியை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தார்கள்.இந்த நிலையில்,இது தொடர்பான வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்து இருப்பதாக சிபிஐ முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும்,தடை செய்யப்பட்ட பேரியம்,நைட்ரேட், உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கொண்டு பட்டாசு தயாரிக்கப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.எனவே,விதிமீறல் தொடர்பாக சிபிஐ ஆணையர் விசாரணை நடத்த வேண்டும் என்றும்,விதிமுறைகள் மீறி பட்டாசு தயாரிப்பு குறித்து 6 வாரத்தில் முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்,கொண்டாட்டங்கள் முக்கியம்தான்,அதை பார்க்க நீதிபதிகளும் காத்திருக்கின்றனர்.ஆனால்,தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை வெடிப்பதால் ஆஸ்துமா நோயாளிகள்,குழந்தைகள் பெரியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே,மற்றவர்களை துன்புறுத்தும் விதமாக கொண்டாட்டம் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில்,சிபிஐ என்ன கண்டுபிடித்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்த சிபிஐ,தங்களது விசாரணை குறித்து அறிக்கைகளை மனுதாரர்களுக்கும்,எதிர்மனுதாரர்களுக்கும் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளது.இதனையடுத்து,இந்த வழக்கின் விசாரணை அக்.6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.