#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் வேண்டும் – தேர்தல் ஆணையம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச்க்குள் நிறைவடைந்துவிடும். இதனால் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கட்டாயம் வழங்க வேண்டும் என்று டெல்லி உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் வழக்கு விசாரணை நடைபெற இருக்கும் நிலையில், தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும் என கூறியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெறுவதற்கு இரண்டரை மாதம் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. ஆனால், மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடவில்லை.

இதனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்