உள்ளாட்சி தேர்தல் – அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து ஓ.பி.எஸ் பரப்புரை..!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வரும் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து பரப்புரை மேற்கொள்கிறார்.

வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறுகிறது.

கடந்த 23-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், நேற்று இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது . இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 1-ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளார். 9 மாவட்டங்களில் அதிமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தது ஓ.பி.எஸ் பரப்புரையில் ஈடுபடவுள்ளர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் முதல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan