#BREAKING: இரு சிறுமிகள் உயிரிழப்பு – இருவர் பணியிடை நீக்கம்!

கழிவறை தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் இரு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு.

பேரூராட்சி கழிவறை (செப்டிக் டேங்) தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் வீரமணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பேரூராட்சியின் கழிவறை தொட்டியில் தவறி விழுந்து சிறுமிகள் சிறுவர் உயிரிழந்தனர். பண்ணைப்புரத்தில் 1-ம் வகுப்பு படித்து வந்த சுபஸ்ரீ (6), நிகிதாஸ்ரீ (7) ஆகிய சிறுமிகள் நேற்று மாலை பேரூராட்சியின் கழிவுநீர் தொட்டி மீது ஏறி விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது, கழிவுநீர் தொட்டியின் மூடி பழுதாகி இருந்ததால், அதன் மீது மிதித்ததில் மூடி உடைந்து எதிர்பாராதவிதமாக சிறுமிகள் 2 பேரும் தொட்டிக்குள் தவறி விழுந்தனர்.

இதையடுத்து இளைஞா்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுமிகளை மீட்டு  சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பேரூராட்சியின் அஜகார்த்தியான செயலுக்கு கண்டனம் தெரிவித்து சிமிகளின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.கழிவறை தொட்டியின் ஸ்லாப் பழுது குறித்து பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இரு சிமிகள் உயிரிழந்துள்ளனர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர், இளநிலை பொறியாளர் வீரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment