#Breaking:திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இன்று மேயர், துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு  மறைமுகத் தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.பல இடங்களில் மானகரடசி மேயர்,நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனிடையே, சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,மதுரை திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டி வேட்பாளர் மனு அளித்துள்ளார்.திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான ரம்யாவை எதிர்த்து  திமுகவின் சர்மிளா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மொத்தம் உள்ள 27 உறுப்பினர்களில் போட்டி வேட்பாளர் 13 உறுப்பினர்களுடன் வந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.