#BREAKING : தமிழக அரசின் இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது…!

  • தமிழகத்தில் இன்றுமுதல் ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்.
  • அரசின் இ-பதிவு இணையதளம் முடங்கி இருந்த நிலையில், தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த  நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

 இந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது  ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மளிகை கடைகள், காய்கறிகள், இறைச்சி கடைகள் போன்றவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

மேலும் மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குபவர்கள் மற்றும் தச்சர்கள் போன்ற சுய தொழில் செய்பவர்கள் இணையத்தில் பதிவு செய்தபின் பணிக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் போன்ற பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களிடமிருந்து e-pass பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அரசின் இ-பதிவு தளத்தில் ஒரே நேரத்தில் பலரும் இ-பதிவுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால், அரசின் இ-பதிவு இணையதளம் முடங்கி இருந்த  நிலையில், தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.