#Breaking: இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி.!

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 56 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு தொகுதியிலும் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே ஆம் ஆத்மி ஆட்சி சட்டமன்ற தேர்தலுக்கு ஆலோசகராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். டெல்லியில் 3-வது முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் நிலையில், பிரசாந்த் கிஷோர் இதுபோன்ற கருத்தை பதிவிட்டுள்ளார். மேலும்  டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பரப்புரை உத்திகளையும், ஆலோசனையும், வகுத்து தந்தார் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்