அம்மா ok! சரத்குமாரை அப்பா என சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?

அம்மா ok! சரத்குமாரை அப்பா என சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?

ரயன்  மிதுன்   ஆமா என் அப்பா தான். இப்ப என்ன பண்ண போற? என அதிரடியாக பதிலளித்துள்ளார்.

இயக்குனர் தனசேகரன் இயக்கத்தில் மணி ரத்னம் தயாரிப்பில் பல ஆண்டுகளுக்குப்பின் உருவாகியுள்ள திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தில் ராதிகாவும், சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து ராதிகாவின் மகள் ரயன் மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார். அந்த  பதிவில், உங்களை நினைக்கவே பெருமையாக உள்ளது அப்பா என பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் சரத்குமாரை அப்பா என சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா என கேட்டார். அதற்கு பதிலளித்த ரயன்  மிதுன்   ஆமா என் அப்பா தான். இப்ப என்ன பண்ண போற? என அதிரடியாக பதிலளித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube