#BREAKING: புயல் எதிரொலி: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல் எதிரொலி வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாண்டஸ் புயல் எதிரொலியாக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment