அதிர்ச்சி.. கொரோனாவால் ஒரே நாளில் 40 பேர் பலி…20,557 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 15,528-ஆக பதிவாகி இருந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் 20,557-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனாவால் பதித்தோரின் எண்ணிக்கை 4,38,03,619 ஆக உள்ளது.
  • தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் செவ்வாய்க்கிழமை 3.32 சதவீதத்தில் இருந்து இன்று 4.13 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,43,654 லிருந்து 1,45,654 ஆக உள்ளது. 24 மணிநேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,000 அதிகரித்துள்ளன.
  • கடந்த 24 மணிநேரத்தில் அதாவது ஒரே நாளில் கொரோனா தொற்றால் 40 பேர் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,25,825 ஆக உள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மொத்த கொரோனா இறப்புகளில், கேரளா 11, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தலா 6, பஞ்சாபில் நான்கு, சிக்கிமில் 3, டெல்லியில் இரண்டு மற்றும் ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர், மணிப்பூரில் இருந்து தலா ஒருவர் பதிவாகியுள்ளனர். ஒடிசா மற்றும் ராஜஸ்தான்.
  • இதுபோன்று, நாட்டில் ஒரே நாளில் 18,517 பேர் கொரோனா  பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,13,623 லிருந்து 4,31,32,140 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் குணமடைந்த விகிதம் தற்போது 98.47 சதவீதமாக உள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 200.61 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 26,04,797 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment