#Breaking:பாலியல் புகார்கள்;அனைத்து கல்லூரிகளில் உடனே இதனை அமைக்க வேண்டும் – UGC அதிரடி உத்தரவு!

சமீபகாலமாக கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்,பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக அமைக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் எனவும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக,அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

“அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாலின அடிப்படையிலான வன்முறை பிரச்சினையை கையாள்வதற்கு உயர்மட்ட கமிட்டியை உடனடியாக அமைக்க வேண்டும்.மேலும்,பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும். குறிப்பாக,உங்கள் மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் யுஜிசியின் அறிவுறுத்தலின்படி பெண் ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாலியல் துன்புறுத்தல்களை நிவர்த்தி செய்தல் விதிமுறைகள்,2015 இன் படி செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்த சாக்ஷம் போர்ட்டலில் (அதாவது https://saksham.ugc.ac.in/) பாலின தணிக்கையின் ஆன்லைன் இணக்கத்தை(compliance)நிரப்பவும்,உங்களுடன் இணைந்த கல்லூரிகளுக்கும்(affiliated colleges) இதனை தெரிவிக்க வேண்டும்”,என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment