#BREAKING: கோயிலுக்குள் செல்ல பட்டியலினத்தவருக்கு அனுமதி!

சித்தரேவு கிராமத்திலுள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரிய வழக்கில் உத்தரவு. 

பழனி அருகே செல்வா விநாயகர், உச்சிகாளியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபட உயர் நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர், புகாருக்குள்ளான மோதில்ராம், சின்னசாமி மற்றும் ராமசாமி பதில்தர வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. கடவுள் வழிபாட்டில் சாதிய பாகுபாடுகளுக்கு அனுமதியில்லை, கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்றும் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில்  விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment