#BREAKING: ஊரக வேலை திட்ட நிதி – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

வேலையே செய்யாமல் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவார்கள் என நீதிபதிகள் கவலை.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அந்நிய நாட்டு மரங்களை அகற்ற ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தலாமா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அந்நிய மரங்களை அகற்ற 100 நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, வேலையே செய்யாமல் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவார்கள் என நீதிபதி வேதனை தெரிவித்தனர்.

மரங்களை அகற்ற மலைவாழ் மக்களை பயன்படுத்தலாம் என நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் தெரிவித்தனர். அகற்ற 100 நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்