#Breaking:தீ விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் -தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு!

தெலுங்கானா:தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தெலங்கானா முதல்வர் அறிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம்,போய்குடாவில் பழைய பொருட்கள் உள்ள குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

8 தீயணைப்பு வண்டிகள்:

குடோனில் இருந்த 12 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு எட்டு வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.மேலும்,தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.

விபத்துக்கான காரணம்:

ஷாக் சர்க்யூட் ஏற்பட்டதே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும்,குடோனில் இருந்த தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதால் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.எனினும்,இந்த தீ விபத்து தொடர்பாக விசாரித்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

ரூ.5 லட்சம் நிவாரணம்:

இந்நிலையில்,தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

முதல்வர் அலுவலகம்:

இது தொடர்பாக,தெலுங்கான முதல்வர் அலுவலகம் கூறியிருப்பதாவது:”செகந்திராபாத்,போய்குடாவில் உள்ள ஸ்கிராப் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முதல்வர் ஸ்ரீ கே. சந்திரசேகர் ராவ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விபத்தில் இறந்த பீகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு,நிவாரணத் தொகையாக ரூ. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும்,உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உடல்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமைச் செயலாளர் ஸ்ரீ சோமேஷ்குமாரிடம் முதல்வர் கூறியுள்ளார்”,என்று தெரிவித்துள்ளது.