#BREAKING: விசாரணை கைதி மரணம் – மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கில் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.

விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்குதொடர்பாக  தாமாக முன்வந்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம்,  விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் விக்னேஷ் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையத்தில் சென்னை காவல் ஆணையர் ஏற்கனவே ஆஜராகி விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கில் காவலர்கள் 9 பேர் , சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். சம்மன் அனுப்பபட்டத்தை தொடர்ந்து தலைமைச் செயலாக காலனி காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விக்னேஷ் மரண வழக்கு – கொலைவழக்காக மாற்றப்பட்டு, காவலர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்